கையடக்கதொலை பேசி சேவை வழங்குனரான SLT மொபிடெல், தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டத்திற்கான நகர்வாக சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக CHAMP கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
இக்கைக் கடிகாரமானது அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளதுடன், பிள்ளை இருக்குமிடத்தினை பெற்றோர் இலகுவாக அறிந்து கொள்வதற்கேதுவான வசதிகளையும் கொண்டுள்ளது.
தகவல் தொழிநுட்பம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிதொடர்பான அமைச்சின் நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டு பிள்ளைகள் இருக்கும் இடத்தினை பெற்றோர் எப்பொழுதும் அறிந்திருப்பதற்கு உதவியாக இக்கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பதுறையில் தமது புதியதொழில்நுட்ப அபிவிருத்திகளை கொண்டு தமது வாடிக்கையாளர்களுக்கு மிகசிறந்த சேவையினை வழங்குவதற்கு SLT மொபிடெல் தம்மை அர்ப்பணித்துள்ளது.
நீர் உட்புகாதவாறு விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ள இக்கைக்கடிகாரம் GPS தொழிநுட்பத்தினை கொண்டுள்ளது.
இதனால் பிள்ளை இருக்குமிடத்தினை பெற்றோர் அறியமுடிவதுடன் இதில் காணப்படும் தொடர்பாடல் வசதி மூலம் பிள்ளைக்கு அழைப்பினை ஏற்
படுத்தி அவர்களின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும் முடியும்.
நாடு முழுவதுமுள்ள SLT மொபிடெல் கிளைகளில் பெற்றுகொள்ள முடிவதுடன் அதற்காகதயாரிக்கப்பட்ட விசேட பெக்கேஜ் உடன் 2500 ரூபாவை செலுத்தி இக்கைக்கடிகாரத்தினை கொள்வனவு செய்யமுடியும்.

