Headlines News :

Home » » விண்டோஸ் 10 : மைச்ரோசாப்டின் கடைசி இயங்குதள பதிப்பு

விண்டோஸ் 10 : மைச்ரோசாப்டின் கடைசி இயங்குதள பதிப்பு

Written By sifi on Saturday, April 9, 2016 | 6:26:00 PM

விண்டோஸ் 10 தான் மைச்ரோசாப்டின் கடைசி இயங்குதள பதிப்பு என்று விண்டோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் உலகம் முழுவதிலும் பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இயங்கி வரும் ஆப்பிரேட்டிங் சிஸ்டமாக திகழ்ந்து வருகிறது. அதின் புதிய பதிப்பான விண்டோஸ் 10 வரும் ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் மேம்பாட்டாளர் இவான்ஜெலிஸ்ட் ஒரு கருத்தரங்கில் கூறுகையில் தற்போது எங்கள் நிறுவனம் விண்டோஸ் 10 என்னும் புதிய பதிப்பினை வெளியிட உள்ளது, இதுவே எங்கள் கடைசி பதிப்பாக இருக்கும் என குறிப்பிட்டார்.
ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிதாக கணினி இயங்குதளங்களை விண்டோஸ் வெளியிட்டு வந்தது. இனி அவ்வாறு வெளியிடுவதற்கு பதிலாக மாக் இயங்குதளம் போன்று ஏற்கனவே உள்ள விண்டோஸ் ஆப்பிரேட்டிங் சிஸ்டமில் அவ்வப்போது புதுப்பித்து ,மேம்பாடுகளை செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது.
இந்த இயங்குதளம் தொடக்கத்தில் கணினிக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் எக்ஸ்பாக்ஸ் போன்ற கருவிகளுக்கு இந்த இயங்குதளம் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மைச்ரோசாப்டின் இவ்வறிவிப்பை தொடர்ந்து பல புதிய இலவச வசதிகளுடன் விண்டோஸ் 10 வெளியாக இருப்பதால் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :